துளசி செடி ஆன்மீக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் எண்ணற்ற சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்துக்கள் அல்லாது அனைத்து மதத்தினரும் துளசி செடியை வளர்த்து வருகின்றனர். வீட்டில் ஏதாவது ஒரு திசையில் துளசிச் செடியை வைத்து வளர்த்து வருகிறோம் ஆனால் ஆன்மீக ரீதியாக எந்த திசையில் துளசி செடியை வைக்க வேண்டும் என்று சில வரைமுறைகள் உள்ளது. அதன்படி வைக்கும் பொழுது வாழ்க்கையில் முன்னேற்றம் முதல் உடல் ஆரோக்கியம் என அனைத்திற்கும் வாஸ்து ரீதியாக உதவுகிறது.
பொதுவாகவே வீட்டில் துளசி செடி வைப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது. துளசி செடி இருக்கும் போது வீடு புனிதமாகவும் தெய்வீக கலை கொண்டும் காணப்படும்.
துளசி செடியிலிருந்து வெளிப்படும் ஆக்சிஜன் ஆனது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து ஆரோக்கிய ரீதியாகவும் நமக்கு உதவுகிறது. துளசியில் மகாலட்சுமி குடியிருப்பதால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை விளக்கேற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது. தினம்தோறும் துளசி மாடத்திற்கு பூஜை செய்து வருவதன் மூலம் கிரக தோஷங்கள் நீங்கி வாழ்க்கையின் வளர்ச்சி ஏற்படும்.
வீட்டில் துளசி செடி வளர்க்கும் பொழுது கிழக்கு திசை வைத்து வளர்க்க வேண்டும். கிழக்கு திசையில் செடி வைக்க முடியவில்லை என்றால் வடகிழக்கு திசையில் வைக்கலாம் ஆனால் மேற்கு திசையில் மட்டும் வைக்கக்கூடாது.