தமிழ்நாட்டில் ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் மற்றும் வரலாறு உள்ளது. தமிழ்நாட்டில் பிரமிக்கத்தக்க வரலாற்று சிறப்பு அம்சங்களை கொண்ட எண்ணற்ற கோயில்கள் உள்ளது. இருந்த போதிலும் பலருக்கும் தெரியாமல் தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த வரலாறு சிறப்புமிக்க கோவில்கள் இருக்கிறது.
பல கோவில்களுக்கு சென்று இருந்தாலும் அதன் வரலாறு சிறப்புகள் பற்றி தெரியாமல் வந்திருப்போம் அதேபோல் தான் சேலம் மாவட்டத்தில் உள்ள சக்தி வாய்ந்த கோவிலை பற்றி தான் இந்த கட்டுரையில் தொடர்ந்து பார்க்க போகிறோம்
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயிலை பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.. அம்மன் என்றாலே நல்லவர்களுக்கு சாந்தமான முகமும் கெட்டவர்களுக்கு ஆக்ரோஷமான முகத்துடன் தாயாகவே இவ்வுலகில் வலம் வருகிறாள். அப்படிப்பட்ட சேலம் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலானது வடக்கு திசை நோக்கி ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளித்து வருகிறது. இக்கோயிலில் நான்கு திசைகளிலும் அமைந்த கோபுரத்தைக் கொண்ட வாசல் காணப்படுகிறது. இந்த கோயிலுக்கு சென்று வருவதன் மூலம் தலைமுறை தோஷம் நிவர்த்தி ஆவதாக கூறுகின்றனர்.