பொதுவாகவே பலருக்கும் பல விருப்ப தெய்வங்கள் இருக்கும். இருந்த போதிலும் குலதெய்வத்தின் அருள் இருந்தால் தான் நம் வாழ்க்கையில் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்க உதவியாக இருக்கும்.
குலதெய்வத்தின் அருள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் வாழ்க்கையிலும் நாம் செய்யும் வேலைகளில் வெற்றிகளும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும்.
ஒரு சிலருக்கு குலதெய்வத்தின் சாபம் இருக்கும். அதனால் வாழ்க்கையில் பல தடங்கல்கள் வந்து கொண்டே இருக்கும். மேலும் குடும்பங்களில் துன்பங்கள் மாறி மாறி வந்த வண்ணம் காணப்படும். இந்த கட்டுரையில் குலதெய்வ சாபத்திலிருந்து விடுபடுவதற்கு சில வழிகளை தொடர்ந்து பார்ப்போம்…
குலதெய்வ சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் குலதெய்வ சாபத்திலிருந்து விடுபடலாம். என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு குலதெய்வம் என்னவென்று தெரியாது அவர்களும் இந்த தீபத்தை ஏற்றி மனதார வேண்டிக் கொள்வதன் மூலம் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். மேலும் மனதில் ஏதாவது ஒரு ரூபத்தில் எங்கள் குலதெய்வத்தை காட்டுங்கள் என்று வேண்டிக்கொண்டேன் இந்த பூஜையை செய்ய வேண்டும்.
இந்த பூஜைக்கான முக்கிய பொருள் நல்லெண்ணெய் செக்கில் ஆற்றிய நல்லெண்ணையை எடுத்துக்கொண்டு பஞ்சுத் திரியை உபயோகித்துக் கொள்ளலாம். அகல் விளக்கில் நந்தனையை போற்றி குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். பிறகு அந்த அகல் விளக்கில் நல்லெண்ணெயுடன் ஒரு சொட்ட தேன் மற்றும் 3 காய்ந்த மிளகாய் போட்டு வைக்க வேண்டும்.
மேலும் தீபம் ஏற்றி பிறகு தீபத்தை பார்த்து மனதால் வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் காலை மாலை இருவேளையும் இந்த தீபத்தை தொடர்ந்து 41 நாட்கள் ஏற்ற வேண்டும். இவ்வாறு ஏற்றுவதன் மூலம் வாழ்க்கையில் துன்பங்கள் விலகி மகிழ்ச்சி ஏற்படும் குலதெய்வத்தின் அருளும் சிறப்பாக கிடைக்க வழிவகுக்கும்.