தினமும் ஒரு நாளைக்கு இரண்டு வாழைப்பழம் சாப்பிடும் பொழுது நம் உடலில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படுகிறது. நம் உடல் ஆரோக்கியத்தில் என்னென்ன நன்மைகளை வாழைப்பழம் செய்கின்றது என்று இந்த கட்டுரையில் தொடர்ந்து பார்க்கலாம்.
உலகில் எண்ணற்ற நாடுகளில் வாழைமரம் பயிரிடப்படுகிறது. உலகம் முழுவதும் 100 நாடுகளில் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வாழைப்பழத்தை எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே என எண்ணற்ற ஊட்டச்சத்தை நிறைந்துள்ளது.
வாழைப்பழம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்று தொடர்ந்து பார்க்கலாம்.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே வாழைப்பழம் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 3500 முதல் 4700 மில்லி கிராம் வரை பொட்டாசியமானது தேவைப்படுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவு நிறைந்துள்ளது இரண்டு வாழைப்பழத்தை 900 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்களுக்கு வாழைப்பழம் ஒரு வரப் பிரசாதமாக கிடைத்துள்ளது எனவே மலச்சிக்கல் பிரச்சனையினால் அவதிப்படும்போது தினமும் காலை மற்றும் இரவு ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்ளும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனையானது காணாமல் போய்விடும்.
இதய ஆரோக்கியத்திற்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளது பொட்டாசியம் சத்தானது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவது மிகவும் அவசியம்.
செரிமான பிரச்சனையை குணப்படுத்துவதில் வாழைப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு வாழைப்பழம் எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். தொடர்ந்து தினந்தோறும் வாழைப்பழம் சாப்பிட்டு வரும் பொழுது செரிமானப் பிரச்சனையானது குணமாகும்.