Home ஆரோக்கியம் வால்நட் நன்மைகள் முழுசா கிடைக்க இப்படி சாப்பிட்டு பாருங்க….!

வால்நட் நன்மைகள் முழுசா கிடைக்க இப்படி சாப்பிட்டு பாருங்க….!

85
0

வால்நட் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. நம் உடலில் ஏற்படும் எண்ணற்ற நோய்களுக்கு தீர்வு தரும் வால்நட் எப்படி  சாப்பிட்டால் அதன் முழு நன்மைகளும் நமக்கு கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் தொடர்ந்து பார்ப்போம். 

விளம்பரம்

வால்நட் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் நாம் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை தொடர்ந்து பார்க்கலாம்.  வால்நட்  பருப்பை ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை ஏனென்றால் அதன் சுவையானது கொஞ்சம் இனிப்பு மற்றும் கசப்பு சுவையுடன் காணப்படும்.  ஆனால் அதில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் எண்ணிலடங்காதவை.  வால்நட்டை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் நம் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. 

வால்நட்டில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிடுகள் நிறைந்துள்ளதால் உடலில் எண்ணற்ற நோய்களை தீர்க்கும் தன்மை கொண்டது.  அதிகப்படியான கொலஸ்ட்ராலின் அளவை வால்நட் எடுத்துக் கொள்வதன் மூலம் குறைக்கலாம்.  மேலும்  இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது.  நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வு தரும் வால்நட், மேலும் வால்நட்டில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகளவு நிறைந்துள்ளது. 

தூக்கமின்மை பிரச்சனையை தீர்க்கும் தன்மை கொண்டது மேலும் மன அழுத்தத்தை குறைக்கிறது.  நார்ச்சத்து அதிக அளவு நிறைந்துள்ளதால் உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக வால்நட் அமைகிறது. 

விளம்பரம்
Previous articleஉதடு சிவப்பாகவும் மிருதுவாகவும் மாற வேண்டுமா..?   இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!
Next articleகாப்பர் பாட்டில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரியுமா..?