Home ஆரோக்கியம் நீரிழிவு நோயாளிகளுக்கு சத்தான சிவப்பரிசி ரொட்டி..!

நீரிழிவு நோயாளிகளுக்கு சத்தான சிவப்பரிசி ரொட்டி..!

147
0

சுவையான சிவப்பரிசி ரொட்டி..!

நீரிழிவு நோய் வந்து விட்டாலே பொதுவாக பலரும் பல வகையான உணவு வகைகளை அறிவுரையாக கூறுவார்கள் ஆனால் சில உணவு வகைகள் மருந்து போன்று சாப்பிடுவதாக தோன்றும்.  ஆனால் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள சிவப்பரசி ரொட்டி மிகவும் சுவையாகவும் ஆரோக்கியம் ஆகும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகவும் இருந்து வருகிறது. சிவப்பரிசியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.   சிவப்பு அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்து காணப்படுகிறது. 

விளம்பரம்

சிவப்பரிசி ரொட்டி எப்படி தயாரிக்கலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.. 

தேவையான பொருட்கள்

சிவப்பரிசி மாவு –  1  கப் 

வெங்காயம் –  2 

பச்சை மிளகாய் – 2 

மிளகு – 4 

சீரகம் –  1 டீஸ்பூன்

பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்

தேங்காய் துருவல் – 1 கப்

தேவையான அளவு உப்பு மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி இலை

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சிவப்பரிசி மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சிறிது துண்டுகளாக நறுக்கி அந்த பச்சரிசி மாவுடன் சேர்த்து கலக்கவும் அதனுடன் மிளகு 4 மற்றும் 1 டீஸ்பூன் சீரகம் மற்றும் பெருங்காயம் 1\4 டீஸ்பூன் மேலும் 1 கப் தேங்காய் துருவல் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் மேலும் தேவையான அளவு உப்பு மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி இலைகளை சிறிதாக நறுக்கி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். 

மேலும் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து சப்பாத்தி மாவு செய்வது போல் நன்றாக டிசைன் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவை அப்படியே அரை மணி நேரம் ஊற வைத்து பின்பு சிறிது சிறிது உருண்டையாக செய்தது தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  

பின்பு  தோசை கல்லில் நம்  தட்டி வைத்த உருண்டையை  போட்டு சிறிது நெய்  மற்றும் எண்ணெய் கலந்து எடுக்க வேண்டும் மிகவும் சுவையாகவும் மனமாகவும் சிவப்பரிசி ரொட்டி கிடைத்துவிடும்.  சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவாக இந்த சிவப்பரிசி ரொட்டி இருக்கிறது. 

 

விளம்பரம்
Previous articleமுடி உதிர்தல் பிரச்சனையை குணப்படுத்த சிறந்த வைத்தியம்..!
Next articleகற்பூரவள்ளி இலையின் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள்..!