பெரும்பாலான அனைவரும் விரும்பி குடிக்கப்படும் ஒன்று தேநீர் நாம் நமது நாளை தேநீருடன் துவங்குவது வழக்கம் . தேநீர்களில் பல வகை உள்ளது மசாலா டீ , பிளாக் டீ , ஹெர்பல் டீ, க்ரீன் டீ ,இஞ்சி டீ ,லெமன் டீ போன்ற பலவிதமான தேநீர் வகைகள் உண்டு .
தற்போது அனைவரும் தனது உடல் இடையை குறைப்பதற்காக லெமன் டீயை அதிகம் குடித்துவருகிரார்கள். இந்த லெமன் டீயில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.நாம் அருந்தும் ஒரு கப் லெமன் டீ நமது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று எடுத்துக்கொண்டாலும் இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கிறது என்று கூறினால் நம்ப முடிமா !
எலுமிச்சை இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது , தேநீரிலும் அமிலத்தன்மை கொண்டுள்ளது இதனால் நமது உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது இதனால் நமது உடலின் ஆரோக்கியத்தை கெடுக்கும். இது உடலின் செரிமானத்தை மெதுவாக்கும். மேலும் நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ், வீக்கம் தூண்டுகிறது . அதுமட்டுமின்றி நமது உடலின் நீர்மட்டத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு இதனால் பல்வேறு உடல்நலக் கோளாறுகள் உண்டாகும் . இதனால் லெமன் டீயை குடித்த பிறகு தலைவலி மற்றும் உடல் உபாதைகள் எற்படுகிறது.
லெமன் டீ அருந்துவதன் மூலம் கால்சியம் அளவை குறைத்து எலும்புகளை பலவீனமாக்குகின்றன. சாதரணமாகவே லெமன் டீயை ஒருநாளைக்கு 1/2 கப் க்கும் குறைவாக குடித்து வந்தால் எந்தவித ஆபத்தும் வரத்து என்று கூறுகிறார்கள்.