பச்சைப்பட்டாணி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. பச்சை பட்டாணியில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து நம் ஆரோக்கியத்திற்கு பெருமளவில் உதவியாக இருக்கிறது.
பச்சை பட்டாணியில் நிறைந்துள்ள ஊட்டச்சத்து
பச்சை பட்டாணியில் நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. வைட்டமின் பி, வைட்டமின் கே, வைட்டமின் இ, நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து.
பெரும்பாலும் பச்சை பட்டாணியை உலர வைக்கப்பட்டு பின்பு மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த பட்டாணி வருடம் முழுவதும் விற்பனைக்கு கிடைக்கும். சமையலில் சுவையை கூட்டுவதற்கும் சைவ பிரியர்களுக்கு ஒரு சிறந்த உணவை தரக்கூடிய பச்சை பட்டாணியை விரும்பி சாப்பிடக் கூடியவர்கள் பெருமளவில் இருக்கிறார்கள்.
இந்த பச்சை பட்டாணியை வைத்து பல உணவு வகைகளை சமைக்க முடியும். வெஜ் பிரியாணி, வெஜ் குருமா, வெஜ் கட்லெட் என பல வகையான உணவுகளை தயார் செய்து சாப்பிட முடியும். சுவையிலும் ஆரோக்கியத்தையும் முதன்மை வகிக்கும் பச்சை பட்டாணி அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவுப் பொருள்.
பச்சை பட்டாணியின் நிறைந்துள்ள கிளைசமிக் இன்டெக்ஸ் அளவு மிக மிக குறைவாக இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. மேலும் பச்சை பட்டாணியில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதால் சர்க்கரையின் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் இருப்பதற்கு பயன்படுகிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பச்சை பட்டாணி உதவுகிறது. பச்சை பட்டாணியில் நிறைந்துள்ள வைட்டமின் பி6, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி சருமத்தை என்றும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.
புரதச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு பச்சைப் பட்டாணி ஒரு சிறந்த உணவாக அமைகிறது. பச்சை பட்டாணி புரதச்சத்தை பூர்த்தி செய்து உடலில் ஆற்றலை அதிகரிக்கிறது. இறைச்சிகளில் புரதச்சத்து நிறைய உள்ளது. ஆனால் சைவ பிரியர்கள் இறைச்சியை தவிர்க்கும் பொழுது பச்சை பட்டாணி ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. சிறு குழந்தைகளுக்கு புரதச்சத்தில் மிகவும் அவசியம் அவர்களுக்கு உணவில் பச்சை பட்டாணியை சேர்த்து சமைக்கும் பொழுது புரதம் நிறைந்த உணவாக நமக்கு கிடைக்கிறது.