Home அழகு சரும பிரச்சனைக்கான புதியதோர் தீர்வு…!

சரும பிரச்சனைக்கான புதியதோர் தீர்வு…!

136
0

முகத்தின் அழகிற்கு பலவிதமான கிரீம் பயன்படுத்தி இருப்போம்.எந்த மாற்றமும் ஏற்பட்டு இருக்காது.எல்லாம் தற்காலிகமான அழகு பொருட்களே கடையில் விற்கப்படுகிறது.நாம் பயன்படுத்தும் கிரீன் டீ சரும பிரச்சனைகான நல்ல பயனை அளிக்கிறது.கிரீன் டீயில் ஆண்டி ஆக்சிடைடு மற்றும் அதிக ஊட்டசத்துக்கள் உள்ளன. கிரீன் டீ சரும பராமரிப்பிற்க்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

விளம்பரம்

  1.கிரீன் டீ இலை,தேன் மற்றும் சீனி கலந்து முகத்தில் பூசி வர வேண்டும்.இதனால்       முகம் பொலிவுடன் காணப்படும்.

  2.கிரீன் டீயை ப்ரீசர் ல் வைத்து ஐஸ் கட்டியாக எடுத்து தினமும் முகத்தில் தடவி           வரலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

  3.கடலை மாவு,கிரீன் டீ மற்றும் தண்ணீர் கலந்து முகத்தில் தடவ வேண்டும்.சிறிது      நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பு      மற்றும் பருக்கள் வருவதை தடுக்கும்.

   4.கிரீன் டீ பாக்கெட்டை ஊறவைத்து கண்களின் கீழ் பகுதியில் வைக்கலாம்.இது         கருவளையத்தை மறைய வைக்கும்.

  1. மேலும் கிரீன் டீ பவுடருன் தேன் கலந்து கருவளையம் உள்ள இடத்தில் பூசலாம்.விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
  2. சூடான கிரீன் டீயில் ஆவி பிடித்தல் மிகவும் நல்லது. இது பரு வருவதை தடுக்கிறது.

 

விளம்பரம்
Previous articleஉங்கள் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக உள்ளதா..? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!
Next articleசரவணன் மீனாட்சி புகழ் செந்தில், ஸ்ரீஜா விவாகரத்தா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!