இயற்கை அழகு குறிப்புகள்…..!
சியா விதைகள்
சியா விதைகளில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் அடங்கியுள்ளது. இது உங்கள் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. சியா விதைகள் சருமத்திற்கு பயன்படுத்தினால் பல மாற்றத்தை கண்கூடாக பார்க்கலாம். சியா விதைகள் சருமத்தை ஈரப்பதமாகவும், வயதான அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.
இரண்டு தேக்கரண்டி சியா விதை போடி, 4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் போட வேண்டும். பின்பு 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல பலனை அடையலாம்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா சமையலுக்கு பயன்படுத்தும் மூலப்பொருள் ஆகும். பேக்கிங் சோடாவை முகத்திற்கு பயன்படுத்தும் போது முகத்தில் எந்த ஒரு வெடிப்பு ஏற்படாமல் சருமத்தை பாதுகாக்கும். பேக்கிங் சோடாவை பேஸ்ட் செய்து சருமத்தில் பயன்படுத்தினால் சருமத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றை குணப்படுத்தவும் பயன்படுகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு உங்கள் உடலை தலை முதல் கால் வரை மசாஜ் செய்வது சருமத்திற்கு சிறந்தது. தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயின் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியும். உங்கள் சருமத்தை வறட்சியில் இருந்து காப்பாற்றும்.
காபி பேஸ் பேக்
காப்பித்தூள் என்பது ஒரு மூலப்பொருளாகும். இது எக்ஸ்ஃபோலியேட்ஸ் மற்றும் ஹைட்ரேட்டுகள் சருமத்தை பிரகாசமாக்க பெரிதும் பயன்படுகிறது. மற்றும் உங்கள் சருமத்தை இறுக்கமாக்குகிறது. காபி பவுடரால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக் பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து சீரான பளபளப்பான சருமத்தை தருகிறது.
ஒரு தேக்கரண்டி காபித்தூள் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் இரண்டையும் நன்றாக கலந்து பேஸ்ட் செய்து முகம் மற்றும் கழுத்தில் ஃபேஸ் பேக் போட வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.