எந்த செலவுமே இல்லாமல் வீட்டில் தினமும் கிடைக்கும் பொருளை வைத்து முடியை வளரச் செய்யலாம்.வீட்டில் தினமும் சமைக்கும் போது கிடைக்கும் அரிசி தண்ணீர் தான் அது.சீனா,ஜப்பானில் உள்ள பெண்கள் கூட முடியை பராமரிக்க இந்த முறைதான் கடைபிடித்து வருகிறார்களாம்.மேலும் முடி நரை வராமலும் தடுக்கும் என கூறப்படுகிறது. அரிசி தண்ணீரை எப்படி பயன்படுத்துவது,அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
அரிசி சமைத்த பிறகு கிடைக்கும் தண்ணீர் அல்லது அரிசி ஊற வைத்த தண்ணீரை எடுத்துக்கொள்ளலாம்.
இது பயன்படுத்துவதின் மூலம் முடியை மிருதுவாகவும்,வேகமாக வளரவும் உதவுகிறது.மேலும் முடியை வலிமையாக்குகிறது.
1.அரிசியில் குறைந்த அளவு ph மதிப்பு உள்ளதால் முடிக்கு ஊட்டசத்துக்கள் கிடைக்கின்றனர்.
2.முடியின் வேர்பகுதிக்கு புரோடீன்கள் கிடைக்கிறது.
அரிசி ஊற வைத்த தண்ணீரை தலையில் தடவி 15 நிமிடங்கள் வைத்து கழுவ வேண்டும்.இதனால் முடி நன்கு வளரும்.இதனை வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வரலாம்.நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.